நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக கேரளத்தில் வழக்கு

திருவனந்தபுரம்:

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேரள மாநில காவல் துறைத் தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.

"தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய முதற்கட்ட காட்சி சமீபத்தில் வெளியானது.

அதில் நடிகை ஆதா ஷர்மா, புர்க்கா அணிந்துகொண்டு உரையாடும் காட்சியில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். இது கேரளத்தைச் சேர்ந்த 32,000 பெண்களின் கதை' எனக் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் திருவனந்தபுரம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் இத்திரைப்படத்துக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளார். இப்புகார் மாநில முதல்வர் பினராயி விஜயன் பார்வைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தப் புகார் மனு குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset