நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் சிறந்த விமானச் சேவைகளில் கத்தார் ஏர்வேஸுக்கு முதல்  இடம்

லண்டன்:

உலகின் சிறந்த விமானச் சேவை நிறுவனங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

விமானச் சேவைகளை ஆய்வு செய்யும் இணையத்தளமான Skytrax-இன் தரவரிசையில் அது இடம்பெற்றது.

தரவரிசையில் இடம்பெற்ற விமானச் சேவைகள்

முதல் இடம் - கத்தார் ஏர்வேஸ்

2ஆம் இடம் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

3ஆம் இடம் - எமிரேட்ஸ்

4ஆம் இடம் - ANA (All Nippon Airways)

5ஆம் இடம் - குவாண்டாஸ்

6ஆம் இடம் - ஜப்பான் ஏர்லைன்ஸ் 

7ஆம் இடம் - டர்கிஷ் ஏர்லைன்ஸ்

8ஆம் இடம் - ஏர் பிரான்ஸ் 

9ஆம் இடம் - கொரியன் ஏர்வேஸ் 

10ஆம் இடம் - ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த சிப்பந்திகளுக்கான விருது உட்பட 9 விருதுகளையும் பெற்றது.

அவற்றுள் 'சிறந்த முதல் வகுப்புப் பிரிவு', ' சிறந்த முதல் வகுப்புப் பிரிவு இருக்கை' விருதுகளும் அடங்கும்.

Skytrax கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 14 மில்லியன் வாடிக்கையாளர்களிடம் கருத்தாய்வு நடத்தியது.

கருத்தாய்வில் 350க்கும் அதிகமான விமானச் சேவை நிறுவனங்கள் பங்கேற்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset