நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் தூங்கியதால் விமான நிலையத்தை தவற விட்ட பைலட்டுகள்

கார்டூம்:

சூடானில் தலைநகர் கார்டுமிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு போயிங் 737 ரக விமானம் பறந்து  கொண்டிருந்தது. விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை தானியங்கி (ஆட்டோ) இயக்க முறையில் அமைத்த பிறகு விமானிகள் இருவரும் தூங்கிவிட்டனர்.

இதன் விளைவாக, விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டிச் சென்றது. இதை கவனித்த ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ஏடிசி) அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். 

ஆனால், இது பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது.

அதன்பின்னர் விமானிகள் இருவரும் விழித்துக்கொண்டு விமானத்தை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமானத்தில் சிறிது நேரம் ஆட்டோ முறையில் இயங்க செய்து சிற்றுறக்கம் புரிவது இயல்பு தான். ஆனால், அவரது துணை பைலட் கண்காணிப்பார். இங்கு இருவருமே தூங்கியதுதான் பிரச்சினை. 

அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset