நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது

தெஹ்ரான்: 

ஈரானின் அரசு முறைக்கு எதிராகவும், அமெரிக்கா, இஸ்ரேலிய நலன்களுக்குச் சார்பாகவும் செயல்பட்டதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான நபர்களை ஈரான் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய ரீதியில் கைது செய்துள்ளனர். 

நாட்டின் 31 மாநிலங்களில் செயல்பட்டு வந்த 111 ரகசியக் குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானியப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மக்கள் வீதிகளில் கூடியிருந்த வேளையில், இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காணொலிகளை அனுப்பிய குற்றத்திற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 350 'ஸ்டார்லிங்க்' (Starlink) இணைய முனையங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பாதுகாப்பு கருதி சுமார் 9.2 கோடி மக்களுக்கான இணையச் சேவையும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தெஹ்ரான், அண்டை நகரமான கராஜ் போன்ற பகுதிகளில், நாட்டின் உயரிய தலைவர்களின் படங்களை இழிவுபடுத்தியவர்களும் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தற்போது ஈரான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, முக்கியச் சாலைகளில் தடைகளை ஏற்படுத்திக் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset