நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளை தடுக்க இயலாது: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளை தடுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இலவச பொருள்களையும், வளர்ச்சித் திட்டங்களையும்  குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் இலவச தேர்தல் வாக்குறுதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தேர்தல் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்து, வாக்காளர்கள் இலவசங்களையும் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் கண்ணியமான வருமானத்தை ஈட்டுவார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அதை செய்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அதிக வாக்குறுதிகள் அளித்த கட்சிகள் பெரும் தோல்வியைத் தழுவியும் உள்ளன.

இலவச டிவி, வீட்டு உபயோக பொருள்களுக்கும், இலவச வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இலவச கல்வி பயிற்சி வாக்குறுதியை இலவச பொருள்களுடன் ஒப்பிடக் கூடாது..

மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத்  தாழ்வுகளை ஈடு செய்ய மாநிலங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 38 (2) வலியுறுத்துவதாக சரியான வாதம் முன்வைக்கப்பட்டது.

அதன்படி, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset