நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விம்பிள்டனில் ரஷிய வீரர்களுக்கு தடை  குடியுரிமையை மாற்றி போட்டியில் பங்கேற்கும் ரஷிய வீராங்கனை 

லண்டன்:

ரஷியாவில் பிறந்த டென்னிஸ் வீராங்கனை நடேலா டிசலமிட்ஸே விம்பிள்டன் போட்டியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை மாற்றியுள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 115 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் ரஷிய வீரர்களுக்கு மீது பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தடை விதித்தன. 

அந்த வகையில் விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. இதனால் ரஷிய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாது. 

இதனால் ரஷிய வீராங்கனை நடேலா டிசலமிட்ஸே தனது குடியுரிமையை ஜார்ஜியனாக மாற்றியுள்ளார். இதனால் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவராக இனி இவர் போட்டிகளில் விளையாடுவார். 

டபிள்யூடிஏ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக நடேலா டிசலமிட்ஸே ஜார்ஜிய குடியுரிமை பெற்றவர் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் விம்பிள்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இவர் செர்பியாவின் அலெக்ஸாண்ட்ரா க்ரூனிக்குடன் சேர்ந்து களம் காணவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset