நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்

லண்டன்:

2025 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஸ்போர்டிகோ என்ற தளம் வெளியிட்டுள்ளது.

முதல் 100 பேர் உள்ள தரவரிசையில், 8 விளையாட்டுகளில் உள்ள 28 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

முதல் 100 இடங்களில் ஒரு பெண் வீராங்கனை கூட இடம்பெறவில்லை.

இந்தப் பட்டியலில், பிரபல கால்பந்து வீரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். 

2025ஆம் ஆண்டில் 260 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.  

மெக்சிகோவை சேர்ந்த குத்துச்சண்டை வீரரான அல்வாரெஸ் மெஸ்ஸி, 137 மில்லியன் டாலர் உடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.   

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 130 மில்லியன் டாலர் வருமானத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

பேஸ்பால் வீரர் ஜுவான் சோட்டோ, 129.2 மில்லியன் டாலருடன் 4ஆவது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் அதிகபட்சமாக கூடைப்பந்து விளையாட்டை சேர்ந்த 40 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கால்பந்து 
வீரர்கள் 22 பேர் உள்ளனர்.  

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset