நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்காக ‘நெக்ஸ்ட் செட்’: சானியா மிர்சா தொடக்கம்

டெல்லி:

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, இந்திய பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில்  ‘நெக்ஸ்ட் செட்’ என்ற புதிய முயற்சியை தொடங்கினார்.

இந்த திட்டம், தேசிய, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட பெண் வீராங்கனைகளுக்கு தொழில்முறை பயிற்சி, உடல் தகுதி, மனநலம், போட்டி தயாரிப்புகளுக்கான ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக டென்னிஸ் விளையாட்டை மையமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், சானியா மிர்சா மையம் மூலம் பயிற்சி முகாம்கள், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், தேவையான நிபுணர் குழு ஆதரவும் வழங்கப்படும். சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் கிடைத்தால், இந்திய பெண் வீராங்கனைகள் உலக அளவில் சிறந்து விளங்க முடியும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என சானியா மிர்சா தெரிவித்தார்.

இந்த முயற்சி, இந்தியாவில் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset