நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA உலகக் கிண்ணம் மலேசியா வந்தடைந்தது

ஷாஆலம்:

வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக FIFA உலகக் கிண்ணம் மலேசியா வந்தடைந்தது.

ஷாஆலமில் உள்ள ஸ்கைபார்க் விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பிரேசிலிய ஜாம்பவான் கில்பர்டோ சில்வாவுடன் 75 நிறுத்தங்கள் அடங்கிய உலகளாவிய சுற்றுப்பயணத் தொடருடன் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பை மலேசியாவை வந்தடைந்தது.

இந்த மதிப்புமிக்க கிண்ணம் இன்று மாலை வரை சன்வே பிரமிட்டில் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும்.

உலகின் மிக உயர்ந்த சாம்பியன் கின்ணம் ஆகக் கடைசியாக கடந்த  2014 இல் பிரேசிலில் நடந்த போட்டியின் போது மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின் இம் முறை மீண்டும் மலேசியாவுக்கு அக் கிண்ணம் கொண்டு வரப்பட்டது.

முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் 2026 உலகக் கிண்ணத்தை அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset