நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், பார்சிலோனா வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல், பார்சிலோனா உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

வெலட்ரோம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் மார்செலே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் மர்செலே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டோமினிக் சோபோஸ்லாய், கோடி காப்கோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பராகுவே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பாஃவோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கலாத்தாசாரே அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் பாயர்ன் முனிச், ஜூவாந்தஸ், நியூகாஸ்டல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset