நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறைக்கு சென்றார் சித்து

பாட்டியாலா:

34 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து காரில் வந்த சித்துவுடன், நவ்தேஜ் சிங் சீமா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உடனிருந்தனர். அவருடைய வீட்டின் முன்பாக கட்சித் தொண்டர்கள் சிலரும் கூடியிருந்தனர்.

முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவர் நரீந்தர் பால் சிறை செல்லும் சித்துக்கு ஆதரவு அளிக்க தொண்டர்கள் கூடி இருக்க வேண்டும் என்றார்.

Navjot Singh Sidhu: Sidhu Is Now Prisoner Number 241363! How Will His Prison  Life Be? | Navjot Singh Sidhu Is Now Prisoner Number 241383, How He Will  Spend His Days In Jail

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தன் நண்பர்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங்  சித்து, ஷெரன்வாலா கேட் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது, பின்னால் காரில் வந்த குர்நாம் சிங் (65) என்பவர், தனது வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளார்.

இதில் இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் குர்நாம் சிங் காயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset