நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை 

சென்னை: 

சிபிஐ சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் 5 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ தரப்பில் காண்பிக்கப்பட்ட எஃப்ஐஆரில் எனது பெயர் இல்லை. இந்த சோதனை நடத்தப்படும் தருணம் சுவராஸ்யமானது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset