நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள படம் வெளியிடப்படுகிறது 

பாரிஸ்:

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள லீ மஸ்க் என்ற குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். 

2-3 புத்தகங்கள் எழுதும் அளவுக்கு 2 ஆஸ்கர் உள்பட அவர் பெற்ற விருதுகள் உள்ளன. இந்நிலையில் இயக்குனர் என்ற புதிய அவதாரத்தை ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துள்ளார்.

அவரது இயக்கத்தில் 'லீ மஸ்க்' என்ற 36 நிமிடங்கள் ஓடும் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கி தயாரித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

லீ மஸ்க் படத்திற்கான கதையை ரஹ்மானுடன் அவரது மனைவி

சாய்ரா ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளனர். ஆங்கில மொழியில் இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இசையும் ரஹ்மான்தான் அமைத்துள்ளார்.

Busan: A.R. Rahman 'Le Musk' VR Film in Post-Production - Variety

இந்நிலையில் பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட திருவிழாவில், லீ மஸ்க் குறும்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2020-ம் ஆண்டு அத்கான் சத்கான் என்ற இந்தி படத்தை தயாரித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் திரைப்படத்தை தயாரித்ததுடன், அதற்கு கதையும் ரஹ்மான் எழுதியிருந்தார்.

தற்போது அடுத்த கட்டமாக லீ மஸ்க் குறும்படத்திற்கு கதை, தயாரிப்பு, இயக்கம், இசை என 4 முக்கிய வேலைகளையும் ரஹ்மான் முடித்துள்ளார். முழு நீள படத்தை இயக்குவதற்கு முன்னோட்டமாக, குறும்படத்தை இயக்கி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல் படங்களின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. 

அடுத்தாக பொன்னியின் செல்வன் பட பாடல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset