நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுகள்: டைவிங் பிரிவில் இலக்கை அடைந்தது மலேசியா

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியின் டைவிங் பிரிவில் மலேசிய அணி இலக்கை அடைந்துள்ளது.

8 தங்கப்பதக்கம் என்ற இலக்குடன் மலேசிய அணி சீ போட்டியில் களமிறங்கியது.

நேற்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்ற மலேசியாவில் டத்தோ பண்டலேலா ரினோங், நோர் டபிதா ஆகியோர் 292.14 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்.

இதன் மூலம் டைவிங் போட்டியில் மட்டும் மலேசிய அணி 8 தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

அதே வேளையில் இலக்கையும் மலேசிய அணி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset