செய்திகள் உலகம்
ஆகஸ்ட் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: பொதுமக்களுக்கு சவுதி அரேபிய அரசு வலியுறுத்து
ரியாத்:
சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகம் தரப்பில், “வரும் ஆகஸ்ட் மாதம் முதல் குடியிருப்பு வாசிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 10:35 am
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர்
November 24, 2024, 4:22 pm
லெபனான் தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தைத் தாக்கித் தரைமட்டமாக்கிய இஸ்ரேல்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am