நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனான் தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தைத் தாக்கித் தரைமட்டமாக்கிய இஸ்ரேல்

பாஸ்டா:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தை இஸ்ரேல் தாக்கித் தரைமட்டமாக்கியது. 

அதில் 40 பேர் மாண்டனர். 90க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

எந்த எச்சரிக்கையுமின்றி 5 ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதில் அந்த 8 மாடிக் கட்டடம் இடிந்தது.

பாஸ்டா  பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இஸ்ரேலிய ராணுவம் எதுவும் கூறவில்லை.

ஹிஸ்புல்லா மூத்த அதிகாரி ஒருவரைக் குறிவைத்தே எச்சரிக்கை விடுக்காமல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மரபணுச் சோதனை மூலம் மாண்டவர்கள் அடையாளம் காணப்படுவர் என்று லெபனான் சுகாதார அமைச்சு கூறியது.

அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்தியுள்ள 4ஆவது தாக்குதல் இதுவாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset