நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவை கலைக்காததால் என் மீது வழக்கு பாய்ந்தது: ஸாஹித் ஹமிதி

கோலாலம்பூர்:

அம்னோவை கலைத்துவிடுமாறு துன் மகாதீர் தம்மிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் தம் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் அம்னோ தலைவர் ஸாஹித் ஹமிதி தெரிவித்துள்ளார்.

அம்னோ பொதுப்பேரவையில் உரையாற்றிய அவர், மகாதீர் 22 மாதங்கள் பிரதமராகப் பொறுப்பு வகித்ததால் தாம் குற்றம்சாட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தன் மீதும், நஜிப் உள்ளிட்டவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே தங்களுக்கு பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக தேர்வுபடுவதற்கான ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்ட ஸாஹித் ஹமிதி, இந்நிலை ஏற்பட அப்போதைய பிரதமர் துன் மகாதீர்தான் காரணம் என்றார்.

May be an image of 1 person and indoor

"அம்னோவை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை நான் ஏற்கவில்லை. போஸ்கூ (நஜிப்) உள்ளிட்ட நண்பர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது என்றார் ஸாஹித் ஹமிதி.
நாடு 15வது பொதுத்தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில், பிரதமர் வேட்பாளராக அம்னோ தலைமை யாரை முன்னிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்தான் அந்த வேட்பாளர் என ஸாஹித் ஹமிதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தம்மால் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாமல் போனதற்கு துன் மகாதீர்தான் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset