நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாப்பாகோபோவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு தொடர்ந்தார்

கோலாலம்பூர்:

வலைபதிவாளர் வான் முஹம்மது அஸ்ரி அல்லது பாபாகோமோ என்று அழைக்கப்படுபவர் மீது தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் வழக்குப் பதிவு செய்தார்.

ரஸாருடினை கெளரவமான கைதி விபச்சாரி என்றும், 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்  ஆள் என்றும் பாபாகோமோ கூறியது தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் நோட்டீஸ் நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பாப்பாகோமோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் ராம் குமார் கூறினார்.

எனவே வாதியான ரஸாருடின் வாய்மொழி அவதூறு, எழுத்துப்பூர்வ அவதூறு சேதங்கள், பொதுவான சேதங்கள், கடுமையான அல்லது முன்மாதிரியான சேதங்கள், சிறப்பு சேதங்களுக்கு இழப்பீடு கோருகிறார் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset