நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியில் பாதுகாப்பற்ற கட்டிடம்; புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை: டத்தோ சுரேஷ்குமார்

தம்புன்:

தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியில் உள்ள ஒரு பகுதி கட்டிடம், கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தலைமையாசிரியர், வட கிந்தா மாவட்ட கல்வி அதிகாரி, கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுப் பணித்துறை பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து விரிவான அறிக்கை தயாரித்துள்ளது. அதில் அக்கட்டிடத்தின் ஒரு பகுதி பாதுகாப்பற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டமிடல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தம்புன் நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு அதிகாரி டத்தோ அ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குரிய அடிப்படை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset