நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா-சிங்கப்பூர் விபச்சார கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக இணையதளத்தைப் பயன்படுத்திய மலேசிய-சிங்கப்பூர் எல்லை தாண்டிய கடத்தல் கும்பலைத் தடுக்கும் நடவடிக்கையில் மொத்தம் 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

சிங்கப்பூர் போலிஸ் படையுடன் இணைந்து எல்லை தாண்டிய கறை படிதல் ஆப்ஸ் நேற்று தொடங்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜொகூரைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு வளாகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும் ஜொகூர் போலிஸ்படையும் இணைந்து 29 முதல் 56 வயதுடைய ஒரு உள்ளூர்  வாசிகள்,  எட்டு வெளிநாட்டவர்கள் அடங்கிய ஒன்பது நபர்களை கைது செய்ய முடிந்தது.

எட்டு வெளிநாட்டவர்களில் ஏழு சீனர்கள் , ஒரு சிங்கப்பூரர் உள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset