நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறு அறிவிப்பு வரும் வரை ஷுஹாய்லி பணியை தொடர்வார்: வழக்கறிஞர்

சிப்பாங்:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஜைன், இன்று நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போதிலும், நிர்வாக அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லாதவரை வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர்வார்.

அவரது வழக்கறிஞர் டத்தோ ரோசல் அசிமின் அகமட் இதனை கூறினார்.

தனது கட்சிக்காரர் அரசு ஊழியராக தனது பணியைத் தொடர்வதைத் தடுக்க இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை.

எவ்வாறாயினும், பொது சேவையில் முகமட் ஷுஹாய்லியின் நிலை தொடர்பான எந்தவொரு முடிவும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உட்பட்டது என்று அவர் விளக்கினார்.

இதுவரை, எந்த அறிவுறுத்தலும் இல்லாமல், அவர் வழக்கம் போல் பணியில் இருப்பார், என்று அவர் இன்று சிப்பாங் செஷன்ஸ்,  மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் முகமட் ஷுஹாய்லிக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset