நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கிற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் தற்காலிக சிறப்பு மானியத்தை அரசு வழங்கும்: பிரதமர் அறிவிப்பு

கூச்சிங்:

இந்த ஆண்டுக்கான சரவாக்கின் சிறப்பு மானியத்தின் அளவை மத்திய அரசு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், இறுதி விநியோக சூத்திரம் தீர்மானிக்கப்படும் வரை ஒரு தற்காலிக நடவடிக்கையாக, சபாவின் சிறப்பு மானியத்தின் அளவை புத்ராஜெயா இதற்கு முன்னர் படிப்படியாக 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியதாகக் கூறினார்.

சரவாக்கின் வலுவான நிதி நிலையை கருத்தில் கொண்டு, அதற்கு உண்மையில் இதுபோன்ற உயர்வு தேவையில்லை.

ஆனால் நட்புறவின் அடிப்படையில் இந்தத் தொகையை அதிகரிக்க முடிவு செய்ததாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சரவாக்கிற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக, 1.5 பில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியத்தை நான் அறிவிக்கிறேன்.

இன்று இரவு சரவாக்கின் கூச்சிங்கில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ மலேசிய தினக் கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

புத்ராஜயாவிலிருந்து வழங்கப்படும் வருடாந்திர சிறப்பு மானியத்திற்கான சூத்திரத்தை இறுதி செய்வதற்காக, சபா மற்றும் சரவாக்குடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று டத்தொஸ்ரீ அன்வார் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு, ஒதுக்கீடு 300 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு சபா மற்றும் சரவாக்கிற்கு தலா 600 மில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியங்களை வழங்கியது.

கடந்த மே மாதம், மத்திய அரசின் நிகர வருவாய்க்கான உரிமை தொடர்பான மாநிலத்தின் அரசியலமைப்பு உரிமை கோரல் தீர்க்கப்படும் வரை, சபாவிற்கான 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset