நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய தலைமுறை MyKadகளுக்கு நாளை முதல் வழங்கப்படும்: டத்தோ ஸ்ரீ சைஃபுதீன்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் உள்ள தேசியப் பதிவுத் துறை, புதிய வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய தலைமுறை MyKad-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் டைனமிக் செக்யூரிட்டி ஹாலோகிராம், ஒளிபுகும் சாளரம், அமலாக்க QR குறியீடு, இரட்டை இடைமுக சிப் ஆகியவை அடங்கும்.

தேசியப் பதிவுத் துறை அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மலேசியர்கள் தங்களின் தற்போதைய அட்டைகளை அவசரமாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில் அறிவுறுத்தினார்.

மேம்படுத்தப்பட்ட MyKad-இல் சுமார் 50 கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

இவை படிப்படியாகச் செயல்படுத்தப்படும். ஆனால், தற்போதைய அட்டைதாரர்கள் தங்களின் பழைய அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset