நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனித மக்காவுக்கு அருகே ட்ரோன்; இது மிகுந்த கவலைக்குரிய செய்தி: பிரதமர் அன்வார் வருத்தம்

புத்ரா ஜெயா:

புனித மக்கா அல்-முகர்ரமாவுக்கு அருகே ஒரு ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகளை நான் மிகுந்த கவலையுடன் நோக்குகிறேன். இஸ்லாத்தின் மிகப்புனிதமான நகரத்தின் பாதுகாப்பிற்கும் புனிதத்தன்மைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்காவில் உள்ள குடியிருப்பாளர்கள், புனிதப் பயணிகளைப் பாதுகாப்பதற்காக சவூதி அரேபிய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையை மலேசியா பெரிதும் பாராட்டுகிறது.

இச் சம்பவம், இப்பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்களையும், புனிதத் தலங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது. 

சம்பந்தப்பட்ட தரப்பினர் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், தாமதமின்றி பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வைக் காணுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset