செய்திகள் மலேசியா
துவாங்கு முஹ்ரிஸின் பதவி விலகும் பிரகடனம் செல்லுபடியாகும்; துவாங்கு நட்ஸாருடின் நெகிரி செம்பிலானின் புதிய யாங் டி-பெர்டுவான்: ஆட்சிக் குழு
சிரம்பான்:
துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் நெகிரி செம்பிலானின் டி-பெர்துவான் பெசார் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது செல்லுபடியாகும் என்று நெகிரி செம்பிலான் அரசாங்கம் ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளது.
இது சம்பந்தமாக, துவாங்கு நட்ஸாருடின் துவாங்கு ஜாபர், நெகிரி செம்பிலானின் புதிய யாங் டி-பெர்துவான் பெசாராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
நேற்று மந்திரி புசார் இஸ்மாயில் லசிம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக மாநில அரசின் நிர்வாகக் குழு இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2026 ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டம் 1959-இன் பிரிவு 10-இன் படி, இது செல்லுபடியாகும்.
மேலும் நடைமுறையில் உள்ள உண்டாங் லுவாக் அவர்களால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.
நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசாரைத் தேர்ந்தெடுப்பதும் பதவியிலிருந்து நீக்குவதும் நான்காவது தூணின் முழுமையான சிறப்புரிமையாகும்.
மேலும் இந்த சிறப்புரிமையானது 1959-இன் பிரிவுகள் 32 மற்றும் 79, அத்துடன் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவுகள் 71, 181 ஆகியவற்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:39 pm
சரவாக்கிற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் தற்காலிக சிறப்பு மானியத்தை அரசு வழங்கும்: பிரதமர் அறிவிப்பு
September 16, 2026, 10:29 pm
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பை ஆட்சிக் குழுவால் மீற முடியாது: உண்டாங்
September 16, 2026, 8:49 pm
செப்டம்பர் 17 முதல் 23 வரை டீசல், RON97, மானியம் இல்லாத RON95 ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு RM0.35 உயர்வு
September 16, 2026, 8:14 pm
புனித மக்காவுக்கு அருகே ட்ரோன்; இது மிகுந்த கவலைக்குரிய செய்தி: பிரதமர் அன்வார் வருத்தம்
September 16, 2026, 4:36 pm
எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள், இராஜதந்திர ஒத்துழைப்பை மலேசியா நாடும்: ஜாஹித்
September 16, 2026, 4:24 pm
ஷீலா கொலை சம்பவம்; குடும்ப வன்முறையை இயல்பாக்க முடியாது: டாக்டர் லிங்கேஸ்வரன்
September 16, 2026, 3:39 pm
பெர்கேசோவின் மெகா i Lindung u திருவிழா: 60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது
September 16, 2026, 3:37 pm
