நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள், இராஜதந்திர ஒத்துழைப்பை மலேசியா நாடும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் தலைமையில், மலேசியா இழப்பீடு கோருவதற்குப் பதிலாக, அண்டை நாடுகளுடனான எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க நீண்டகால இராஜதந்திர ஒத்துழைப்பும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் உள்ள அஹ்மத் ஜாஹித், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான நுட்பமான பிரச்சினைகளைத் திறம்பட நிர்வகிக்க, தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட இராஜதந்திர அணுகுமுறையின் முக்கியத்துவத்தை இன்று செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

புகைமூட்டத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, தீவிர பாதிப்புப் பகுதிகளைக் கண்காணித்தல், மேக விதைப்பு போன்ற தடுப்பு உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

மேலும், ஹலால்-20 மாநாட்டையொட்டி அவர் இந்தோனேசியாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது இதுகுறித்த விவாதங்கள் நடைபெற உள்ளன என்று அவர் கூறினார்.

கூடுதலாக, தீவிர வானிலை நிலைகளுக்குத் தயாராவதற்காக அரசாங்கம் "முன்கூட்டிய நடவடிக்கை" என்ற அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. இது தொடர்பான மேலாண்மை முயற்சிகளுக்காக 5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset