செய்திகள் விளையாட்டு
வியட்நாம் ஆசியான் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது
ஹனோய்:
ஹனோயில் உள்ள மை டின் தேசிய அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தாய்லாந்து அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோதிலும், வியட்நாம் அணி தாய்லாந்தை 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக ஆசியான் கிண்ணத்தை வென்றது.
கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 12ஆவது நிமிடத்தில் தாய்லாந்து நடுகள வீரர் யோட்சகோன் புராபா கோல் கணக்கைத் தொடங்கியபோது போட்டியை நடத்திய வியட்நாம் அணி ஆச்சரியமடைந்தது.
இப் போட்டியில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற தாய்லாந்து அணிக்கு, இரண்டாம் பாதியின் மூன்றாவது நிமிடத்தில் நடுகள வீரர் ககானா கம்யோக் ஒரு பெனால்டி கிக் மூலம் கோல் கணக்கை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது.
நான்கு நிமிடங்கள் கழித்து, தாய்லாந்து கோல்கீப்பர் சாட்சாய் பூட்ப்ரோம் அடித்த சுயகோல், இறுதிப் போட்டியில் வியட்நாமின் இரண்டு கோல் முன்னிலையை மீண்டும் நிலைநிறுத்தியது.
தாய்லாந்தின் மாற்று வீரரான வான்சாய் ஜருனோங்கிரான் 84ஆவது நிமிடத்தில் தனது அணிக்கு 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட ஒரு சுயகோல் காரணமாக, வியட்நாம் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தது.
இந்த வெற்றியின் மூலம், 2008, 2018 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் ஆசியான் கோப்பையை வென்று, நான்கு முறை வென்ற சிங்கப்பூரின் சாதனையை வியட்நாம் சமநிலை செய்தது.
இதற்கிடையில், தாய்லாந்து ஏழு பட்டங்களுடன் இத்தொடரின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 10:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 26, 2026, 9:33 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 25, 2026, 10:50 am
எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்
August 25, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
