நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்

நியூயார்க்:

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி எதிரணி ஆட்டக்காரரைத் தாக்கியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது.

மேஜர் லீக் கால்பந்து போட்டியில் இந்தர் மியாமி ணி சார்பாக மெஸ்ஸி களமிறங்கினார்.

அவரது அணி ஃபிலடெல்ஃபியா யூனியன் அணிக்கு எதிராக விளையாடியது.

எதிரணி வீரர் குய்ன் சல்லிவன் முழங்கையால் தாக்கியதாக மெஸ்ஸி குறை கூறினார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் அவர் சல்லிவனின் பின்தலையில் அடித்தார்.

பெரிய சச்சரவு ஏற்படுவதற்குள் நடுவர் குறுக்கிட்டு ஆட்டக்காரர்களை விலக்கிவிட்டார்.

இருவருக்கும் அட்டை ஏதும் வழங்கப்படவில்லை.

மேஜர் லீக் விதிமுறைகளின்படி ஆட்டக்காரரின் முகம், தலை, கழுத்து ஆகியவற்றில் கை வைக்கக்கூடாது.

மெஸ்ஸிக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset