நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ், 2025/26 சீசனுக்கான தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதே நேரத்தில், மர்ன்செஸ்டர் சிட்டி அணியின் முன்கள வீராங்கனை கதிஜா ஷா, பெண்களுக்கான விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

31 வயதான பெர்னாண்டஸ், தனது சிறப்பான சீசனில் 21 கோல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, ஒரு சீசனில் அதிக கோல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கான பிரிமியர் லீக் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

போர்த்துகல் சர்வதேச வீரரான இவர், அர்செனல் ஜாம்பவான் தியேரி ஹென்றி, மென்செஸ்டர் சிட்டியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் டி ப்ரூய்ன் ஆகியோர் பகிர்ந்து வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்தார்.

21 கோல்களுக்கு உதவியதுடன், பெர்னாண்டஸ் ஒன்பது கோல்களையும் அடித்தார். இதன் மூலம், மைக்கல் கேரிக்கின் கீழ் யுனைடெட் அணி மோசமான தொடக்கத்திலிருந்து மீண்டு வந்து பிரீமியர் லீக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததுடன், சாம்பியன்ஸ் லீக்கிற்கு மீண்டும் தகுதி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset