நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து விளையாட்டில் சாதிக்க வியட்நாமை பின்பற்றுக: பிரதமர் அறிவுறுத்து

கோலாலம்பூர்:

கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டுமானால் மலேசிய அணி, செல்சி மற்றும் வியட்நாம் நாடுகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அறிவுறுத்தி உள்ளார்.

தானும் தீவிர கால்பந்து ரசிகர் என்றும் மலேசிய கால்பந்து அணியை மேம்படுத்துவதில் அரசு தீவிரமாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"அந்த இரு அணிகளுமே சிறந்த கால்பந்து அகாதமியைக் கொண்டிருக்கின்றன. ஒன்பது முதல் 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு அடிமட்டத்தில் இருந்து அனைத்து வகையிலும் சிறப்பான பயிற்சித் திட்டங்கள் உள்ளன.

"மேலும், அவர்களின் அணியைக் கட்டமைக்கும் அமைப்பானது வெறும் வீரர்களை மட்டுமல்ல, பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், பெற்றோர் என அனைவருமே உள்ளனர். இது வெற்றியைத் தேடித் தருகிறது. இவற்றை மலேசியாவும் பின்பற்ற வேண்டும்.

"மலேசிய கால்பந்து சங்கத்தின் F:30 வரைவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் முனைப்பாக உள்ளது. இனி 2022 முதல் ஆண்டுதோறும் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு 10 மில்லியன் ஒதுக்கப்படும்.

"ஒரு காலத்தில் வியட்நாம் ஆசியாவில் சாதாரண அணியாக இருந்தது. இப்போது ஆசியாவின் முன்னணி கால்பந்து அணியைக் கொண்டுள்ள நாடாக வியட்நாம் வளர்ந்துள்ளது. இதற்கு முறையான பயிற்சியும் நல்ல வலுவான கால்பந்து அகாதமியும் இருப்பதுதான் காரணம்.

"2006ஆம் ஆண்டு அந்நாட்டு அணி உலகத்தர வரிசையில் 172ஆவது இடத்தில் இருந்தது. இப்போதோ 2022 கத்தார் உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு பெறுவதற்காக இறுதிக்கட்ட தேர்வுச் சுற்றில் பங்கேற்கும் அணியாக உருவெடுத்துள்ளது," என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset