நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழக, மேற்கு வங்க, ஆந்திர, தெலுங்கானா, கேரள அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு: பாஜக ஆட்சி செய்யாத மாநில ஊர்திகள் நிராகரிப்பா? 

சென்னை: 

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதை அறிந்து, எங்கள் மாநில பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நாட்டின் 75வது குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 

குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை உள்ள பாதையில் முப்படைகளின் அணிவகுப்பு உள்பட பல்வேறு மாநிலங்களின் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். 

Happy Independence Day, India!': Google honours cultural traditions with  unique doodle | Trending - Hindustan Times

Republic Day 2019: Now Watch Highlights Of Republic Day Parade With RDP  India 2019 App

இந்நிலையில் மேற்குவங்கத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு முதலில் அனுமதி மறுத்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

இது தவிர, நாடு முழுவதும் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தென்மாநிலங்களைப் பொறுத்தவரை பாஜகட்சி ஆளும் கர்நாடகாவை தவிர தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

 பாஜக ஆட்சி செய்யாத மாநில ஊர்திகள் புறக்கணிப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.  

தொடர்புடைய செய்திகள்

+ - reset