நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சின் விசா மேல் முறையீடு தள்ளுபடி செய்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம் 

மெல்பெர்ன்:

செர்பிய நாட்டின் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா தொடர்பான மேல் முறையீடு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்ற நீதிபதிகள் மூவர் கொண்ட குழு, அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.

பொதுச் சுகாதார நலன் அடிப்படையில்  ஜோக்கோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அரசாங்கம் ரத்து செய்திருந்தது. 

அதை எதிர்த்து ஜோக்கோவிச் மேல்முறையீடு செய்திருந்தார். 

கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோக்கோவிச் பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தருபவர் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் வாதிட்டது. 

இந்த முடிவால், ஆஸ்திரேலியப் பொது விருதைத் தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பை அவர் இழந்தார். 

மேலும், 21 முறையாக Grand Slam விருதை வெல்லும் பெரும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது. 

-Reuters 

தொடர்புடைய செய்திகள்

+ - reset