நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

சாவ் பாவ்லோ:

கால்பந்து ஜாம்பவான் நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சாண்டோஸ் கால்பந்து கிளப் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

கிழிந்த மெனிஸ்கஸை சரிசெய்ய நெய்மரின் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

33 வயதான அவர் சாண்டோஸுடன் கடினமான பருவத்திற்கு தலைமை தாங்கினார்.
காயத்தின் மத்தியிலும் விளையாடி, பிரேசிலின் உயர்மட்ட அணியிலிருந்து அணி தரமிறக்கப்படுவதைத் தவிர்க்க உதவினார்.

இந்நிலையில் 2023 அக்டோபரில் உருகுவேக்கு எதிராக அவருக்கு ஏற்பட்ட கால் முறிவு, முன்புற சிலுவை தசைநார் காயத்தைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த பிரேசில் தேசிய அணி மருத்துவரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர் மீண்டும் விளையாடுவதற்கு சுமார் ஒரு மாத காலம் தேவைப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset