நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தலைமறைவான 16 இந்தியர்களை ஆஜர்படுத்த செளதி, யுஏஇ சிபிஐயிடம் உதவி கேட்பு

புது டெல்லி:

மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 16 இந்தியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் குற்றவாளிகளை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டின்படி அந்நாட்டு அதிகாரிகள் வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில் விசாரணை நடத்தி, தகுதியின் அடிப்படையில் குற்றவாளிகள் ஒப்படைக்கப்படுவர்.

CBI gets prosecution requests from UAE, Saudi against 19 absconding Indians  | Business Standard News

இதில் கேரளத்தைச் சேர்ந்த ரஜ்னீஷ் தாஸ், கர்நாடகத்தைச் சேர்ந்த சவூகத் அலி தீர்த்தஹல்லி என்பவர் மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அதில் ரஜ்னீஷ் தாஸ் மீது, அவர் உதவி மேலாளராக பணியாற்றிய துபாயைச் சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவூகத் அலி மீது, அவர் நிதி மேலாளராக பணிபுரிந்த கட்டுமான நிறுவனத்தில் ரூ. 2.8 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset