நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா: கங்கையில் நீராட சுமார் 3 மில்லியன் பேர் கூடவுள்ளனர்; இந்தியாவில் தொற்றுப் பரவ வழிவகுக்கும் கங்கா மேளா 

புதுடெல்லி:

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், வருடாந்திர கங்கா-சாகர் மேளா திருவிழாவுக்காக சுமார் மூன்று மில்லியன் பேர் கூடவுள்ளனர். 

மீண்டும் கிருமிப்பரவல் அதிகரிக்க அது காரணமாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்திய இந்துக்களின் நம்பிக்கை. 

திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை நடத்தவோ, பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவோ அரசாங்கத்திடம் போதிய வசதிகளும், மனிதவளமும் இல்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

pay rs 150 and take holy dip in ganga sagar at your home on makar sankranti  2021 25 drones and 1000 cameras will ensure security of sagar mela 2021 at  sagar dweep

சென்ற ஆண்டு, சுமார் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இதேபோன்ற திருவிழா, இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலுக்கு வழியமைத்தது.  

குஜராத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை ஒரு விளையாட்டரங்கில் ஒன்றாக திரட்டி பல மணி நேரங்கள் அமர வைக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தில் தொற்று அதிவேகமாக பரவத்தொடங்கியது.

8 மாதங்களில் இல்லாத அளவு நேற்று, இந்தியாவில் புதிதாக சுமார் 250,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset