
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாடு வளர்கிறதா? அல்லது சேமிப்பு தேய்கிறதா?: பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்
சிங்கப்பூர்:
நற்பண்பு, உதவி, தியாகம், நல்லிணக்கம் போன்றவற்றால் கட்டியெழுப்பப்படுவது பண்பாடு. நம் பண்பாட்டை வளர்த்தெடுக்க காரணிகளாக இருப்பவற்றுள் பெருநாள்களும் பங்காற்றுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்லின சமூகம் தங்கள் கலாச்சார பண்பாடுகளை பெரும்பாலும் பண்டிகைகள் மூலமே காட்சிப்படுத்தவும், உணர்த்தவும் செய்கிறார்கள்.
வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு Tanglin CC IAEC & CCMC ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாடு வளர்கிறது என்ற தலைப்பில் பா காமாட்சி, சுரேஷ் கௌஷிக், அ முருகையன் ஆகியோரும் பண்டிகைகளைக் கொண்டாடுவதால் சேமிப்பு தேய்கிறது என்ற தலைப்பில் அ. மஹ்ஜபீன், சே. சேவாள், ந. புகழேந்தி ஆகியோரும் வாதங்களை வழங்க இருக்கிறார்கள்.
இலக்கியப் பேச்சாளர் அ முஹம்மது பிலால் நடுவராக இருந்து இந்தப் பட்டிமன்றத்தை வழிநடத்துவார்.
பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாடு வளர்கிறது. இல்லை இல்லை அப்படியெல்லாம் ஒட்டு மொத்தமாக சொல்ல இயலாது, பண்டிகைகளைக் கொண்டாடுவதால் சேமிப்பு குறைகிறது என்று இருவேறு கருத்துக்களை முன்னிறுத்தி நேர்மறைச் சிந்தனையோடு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
நல்ல கருத்துக்களும் கலகலப்பும் நிறைந்த சிறப்பான பட்டிமன்றம் வரும் 15 ஜனவரி 2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு துவங்கி மாலை 7 மணி வரை நடைபெறும்.
அதற்கு முன்னதாக பொங்கல் கொண்டாட்டம் மாலை 4 மணிக்கு துவங்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பதாகையில் உள்ள QR Code வழியாக https://fb.me/e/1juWjGEA8 சமூக வலைதளங்களில் நிகழ்ச்சிகளைக் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm