நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ககன்யான் திட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றிகரமாக சோதனை

திருநெல்வேலி:

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜினிக் என்ஜினை இஸ்ரோ மகேந்திரகிரியில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதிக்கப்பட்டது.

720 நிமிடங்கள் நீடித்த இந்தப் பரிசோதனையில் அனைத்து அம்சங்களையும் என்ஜினின் செயல்திறன் பூர்த்தி செய்தது.

இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றது ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகும். அந்தத் திட்டத்தின்படி, மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தில் இந்த என்ஜினை இணைப்பதற்கான நம்பகத்தன்மை பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த என்ஜின் மேலும் 4 பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்படவுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset