
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் பொங்கலுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை
சென்னை:
பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
”14.1.2022 வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும்,
16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக் கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும்,
18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்,
அதற்கான பணி நாளாக 29.1.2022 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm