செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கூடுதல் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் அவசியம் ஏற்படின் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா - ஒமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
பொது அறிவுரைகள்:
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.* கடைகளின் நுழைவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* வணிக வளாகங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும்.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.
* கொரோனா நோய் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை: வானிலை மையம்
November 26, 2025, 9:24 pm
‘செங்கோட்டையன் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளனரா?: திருமாவளவன் கேள்வி
November 26, 2025, 7:41 am
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
November 24, 2025, 7:05 pm
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை
November 24, 2025, 10:54 am
நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
November 23, 2025, 9:51 pm
நாங்கள் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் அலறினால் எப்படி?: நடிகர் விஜய்
November 22, 2025, 6:00 pm
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
November 21, 2025, 10:53 am
சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு
November 20, 2025, 4:14 pm
