செய்திகள் தமிழ் தொடர்புகள்
வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், அக் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதேநேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சின்னம் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘‘தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பத்திருந்தோம்.
விண்ணப்ப படிவித்தில் 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். முதல் சின்னமாக விசில் சின்னத்தை தலைவர் விஜய் கேட்டிருந்தார்.
எங்கள் தலைவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 7:59 am
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தகிக்கும் வெப்ப அலை வீசும்: பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
March 31, 2026, 7:16 am
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
March 30, 2026, 6:34 pm
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
March 30, 2026, 6:09 pm
காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
March 29, 2026, 6:45 pm
700 ஆண்டுகாலத் தமிழரின் அடையாளம்: பழமையான பாலத்தை அகற்ற முயன்ற நீர்வளத் துறைக்கு எச்சரிக்கை
March 29, 2026, 2:47 pm
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி
March 29, 2026, 10:14 am
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
March 28, 2026, 8:45 pm
