செய்திகள் தமிழ் தொடர்புகள்
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
கும்பகோணம்:
தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் அறிவிப்பார் என வேளாண் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2028-ல் நடைபெற உள்ள மாசி மகாமக விழா தொடர்பாக அறநிலைத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
இந்த விழாவுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு திட்டங்கள் தேவையான வசதிகளை தற்போது தயாரித்து வருகிறோம்.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் அறிவிப்பார்.
நிறைவடையாத சுற்றுச்சாலையை குறித்து ஏராளமானோர் என்னிடம் மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் என்னென்ன பிரச்சினை இருக்கின்றது என ஆய்வு மேற்கொள்ள அறிவித்துள்ளோம். மீதமுள்ள சுற்றுச்சாலை பகுதியும் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
