நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் முகப்பு

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர்களின் கூட்டம்; ஒரு சாதாரண கூட்டம் தான்: ஜசெக தலைவர்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர்களின் கூட்டம் ஒரு சாதாரண கூட்டம் தான்.

நெகிரி செம்பிலான் ஜசெகவின் தலைமை செயலாளர் சா கீ சின் இதனை தெரிவித்தார்.

இன்று காலை மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனின் அதிகாரப்பூர இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டம் ஒரு வழக்கமான கூட்டமே ஆகும்.

குறிப்பாக வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியின் ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக இது நடைபெற்றது.

மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் என்ற முறையில் அமினுடினின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், நேற்று மாலை ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றது.

அது ஒரு வழக்கமான கூட்டமே தவிர, சிறப்புக் கூட்டம் அல்ல.

நேற்று மாலை ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறுகிய கால அவகாசத்தின் காரணமாக அது அவசரக் கூட்டம் என அழைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset