நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் முகப்பு

By
|
பகிர்

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி யாழினி 

கோலாலம்பூர், மார்ச் 7 – 

இந்தோனேசியாவின் மேடான் நகரில் பிப்ரவரி 23 முதல் 27 வரை நடைபெற்ற World Youth STEM Invention Innovation 2025 எனப்படும் (WYSII 2025) அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தஞ்சோங் மாலிம் தான்ஶ்ரீ டத்தோ மாணிக்கவாசம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி செல்வி யாழினி புகழேந்தி தங்கப் பதக்கத்தையும் சிறந்த நிலைத்தன்மை விருதையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Sagepure Glow Face Wash (முகம் கழுவும் திரவம்) என்ற புதுமையான கண்டுபிடிப்பின் மூலம், உலகளாவிய அளவில் 8 நாடுகளில் இருந்து பங்கேற்ற 800 போட்டியாளர்களுக்கிடையே சிறப்பாக தேர்வாகி இந்த உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

மலேசியா சாதனை  புத்தகத்தில் புதிய சாதனை

மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே மாணவி என்பதுடன், இவர் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளார். 

இந்த போட்டியில் அவரது பங்கேற்பு, “மலேசியச் சாதனை புத்தகத்தில்” (Malaysia Book of Records) “உலகலாவிய STEM போட்டியில் அதிகபட்ச பங்கேற்பு” என்ற புதிய சாதனையாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

தனது அறிவியல் திறமை மூலம் மலேசியத் தமிழ் பள்ளிகளின் பெருமையை உலகளவில் உயர்த்திய செல்வி யாழினி புகழேந்திக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. 

செல்வி யாழினி இன்னும் பல சாதனைகளைப் புரிய நம்பிக்கை ஊடகமும் மனதார வாழ்த்துகின்றது.

- தயாளன் சண்முகம்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset