நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் முகப்பு

By
|
பகிர்

சபாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தா கினபாலு:

சபா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 1,357 குடும்பங்களைச் சேர்ந்த 4,122 பேராக உயர்வு கண்டுள்ளது. 

நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,203 குடும்பங்களைச் சேர்ந்த 3,579 பேராக மட்டுமே இருந்தது.

தெனோம் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள் எட்டு வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 276 குடும்பங்களைச் சேர்ந்த 743 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுச் செயலகம் கூறியது.

பியூபோர்ட் மாவட்டத்தில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் 432 குடும்பங்களைச் சேர்ந்த 1031 பேர் தங்கியுள்ள நிலையில் மெம்பாக்குட்டில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 872 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதனிடையே, சூக் மாவட்டத்தில் செயல்படும் இரு நிவாரண மையங்களில் 241 குடும்பங்களைச் சேர்ந்த 1,031 பேரும் கெனிங்காவில் உள்ள இரு மையங்களில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேரும் தங்கியுள்ளனர்.

இந்த வெள்ளப் பேரிடரில் பியூபோர்ட், மெம்பாக்குட், தெனோம், கெனிங்காவ் ஆகிய பகுதிகளில் உள்ள 37 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset