நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்குவாஷ்: ஜோஷ்னாவுக்கு தரவரிசையில் 10ஆவது இடம்

புதுடில்லி:

சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் மீண்டும் பட்டியலில் 10ஆவது இடம் பெற்றார் ஜோஷ்னா. 

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 35. உலகத் தரவரிசையில் கடந்த 2016ல் அதிகபட்சம் 10ஆவது இடம் பிடித்தார். தற்போது வெளியான புதிய தரவரிசை பட்டியலில் ஜோஷ்னா, மீண்டும் டாப்-10  பட்டியலில் (10 வது) இடம் பெற்றார். 

இந்திய அணியின் மற்றொரு ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல், ஜோஷ்னா இணைந்து 2014 காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று வரலாறு படைத்தனர். 

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு வரவுள்ள நிலையில் ஜோஷ்னா, தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளது, வரவேற்கத்தக்க நிகழ்வாக உள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், 16ஆவது இடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset