நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய மாணவர்களை கால்பந்து துறையில் மேம்படுத்தும் மீபாவிற்கு எந்த முத்திரையும் குத்த வேண்டாம்: அன்பானந்தன்

கோலாலம்பூர்:

இந்திய மாணவர்களை கால்பந்து துறையில் மேம்படுத்தும் மீபாவிற்கு எந்த முத்திரையும் குத்த வேண்டாம்.

மீபாவின் தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மீபா  தொடர்ச்சியாக கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது.

பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் இப்போட்டியை மீபா நடத்தி வருகிறது.

நீண்ட கால திட்டத்தின் கீழ் மீபா இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதனால் இத் திட்டத்தை பாதியிலேயே விட்டு விட முடியாது.

இதன் அடிப்படையில் தான் மீபா பல தரப்பினரின் உதவியை நாடியது. ஆனால் எங்களை மஇகா என்று முத்திரை குத்தி எந்த உதவியையும் செய்யவில்லை.

ஆனால் இவ்வாண்டு மீபா, மஇகா விளையாட்டுப் பிரிவுடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.

குறிப்பாக மஇகா, எம்ஐஇடி வாயிலாக 1 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.

இவ்வேளையில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதே வேளையில் சமூகத்தின் அடிப்படையில் தான் மீபா திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதில் மீபா மீது எந்த முத்திரை குத்தினாலும் அதன் பணி தொடரும் என்று அன்பானந்தன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset