நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் வெற்றிக்கு மஇகா பக்கப் பலமாக இருக்கும்: அனட்ரூ டேவிட்

கோலாலம்பூர்:

மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் வெற்றிக்கு மஇகா பக்கப் பலமாக இருக்கும்.

மஇகா விளையாட்டுப் பிரிவு தலைவரும் மஇகா உச்சமன்ற உறுப்பினருமான அன்ட்ரு டேவிட் இதனை தெரிவித்தார்.

மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 7, 8ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் கோப்பா அரேனா திடலில் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீபா ஏற்பாட்டில் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

இவ்வாண்டும் நடைபெறும் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 40 மாநில தமிழ்ப் பள்ளி குழுக்களும் பெண் பிரிவில் 40 குழுக்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறது.

இந்த போட்டியில் விலாயா மாநிலத்தில் இருந்து ஆறு தமிழ்ப்பள்ளி குழுக்கள் கலந்து கொள்கிறது.

இந்த போட்டி வெற்றி பெற நாங்கள் பக்கப்பலமாக இருப்போம்.

அதே வேளையில் இக்கால்பந்து போட்டிக்கு மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கினார் என்று அன்ட்ரூ கூறினார்.

இதனிடையே இந்த போட்டியில் 
மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு டத்தோ என்.எஸ். மணியம் கிண்ணமும் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் காத்துக் கொண்டிருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset