நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் திருமணம்

ஹைதராபாத்:

இந்தியாவின் பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு இந்த மாதம் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநரைக் கரம் பிடிக்கவிருப்பதாக அத்தகவல் தெரிவிக்கிறது.

அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும் ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் உறுதியானதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து சிந்து மீண்டும் போட்டிகளில் பரபரப்பாகிவிடுவார் என்பதால் இந்த மாதமே அவரது திருமணத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் உதய்பூரில் நடைபெறும்.

இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சிந்து திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்டுகளுக்கு பேட்மின்ட்டன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகத் திட்டமிடுகிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset