செய்திகள் தமிழ் தொடர்புகள்
இனி தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் ஒலிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை:
‘நீராரும் கடலுடுத்த...’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை. தவெக தலைமையில் அமைந்துள்ள அரசுக்கும் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
இச்சூழலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், 3-ஆவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு ஒவ்வாதது. இதில், தவெக தலைமையிலான அரசுக்கும் உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநா் தரப்பிடம் வலியுறுத்தியபோது, மத்திய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிா்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-ஆவது பாடலாக ஒலிக்கப்பட்டது.
ஆனால், இனி வரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படி, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.
தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
