நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது: அளித்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றியது

கோலாலம்பூர்:

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, முதல் மலேசியக் கப்பல் இன்று ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றது.

மலேசியாவில் உள்ள ஈரானியத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வப் பதிவில், தற்போதைய சவாலான புவிசார் அரசியல் சூழ்நிலையிலும், மலேசியாவுடன் ஏற்படுத்தப்பட்ட நட்புறவை ஈரான் இஸ்லாமியக் குடியரசு எப்போதும் போற்றும் என்று ஈரானியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தனது நண்பர்களை மறக்காது என்று நாங்கள் கூறியுள்ளோம்.

முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விவரங்கள் ஏதுமின்றி கப்பலின் புகைப்படமும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடனான தனது கலந்துரையாடல்களின் முடிவுகளைப் பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset